சேலத்தில் அரசு மருத்துவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

X
சேலம் அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சேலம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் தலைமை தாங்கி பேசினார். இதில் 2009ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அரசு ஆணை 354 மறுசீராய்வு செய்து ஊதிய பட்டை 4ஐ 13-வது ஆண்டில் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார மருத்துவ நிலைய மருத்துவர்களுக்கு படித்தொகை ரூ.3000 உடனடியாக வழங்க வேண்டும். அரசு ஆணை 4 (டி) மூலம் நீக்கப்பட்ட 1500-க்கும் மேற்பட்ட மருத்துவக்கல்லூரி பதவிகளை மீண்டும் கொண்டு வர வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் சங்க மாநில செயலாளர் செந்தில்குமார் மற்றும் சங்க நிர்வாகி கள், டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

