மலேசியா வாசுதேவனுக்கு பிறந்தநாள் விழா

மலேசியா வாசுதேவனுக்கு பிறந்தநாள் விழா
X
ஒட்டன்சத்திரத்தில் முதல்முறை பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மலேசியா வாசுதேவனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாடிய இராஜகானம் இசை குழுவினர் பின்னணி பாடகர்கள் எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோருக்கு நினைவு கூறும் விதமாக அவர்களுடைய பாடல்கள் பாடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் மறைந்த பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோரின் பிறந்த நாளினை முன்னிட்டு, இசைப் பயிற்சிபட்டறை மற்றும் இசை நிகழ்சியை சி.பி.ஐ.எம் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் இசைபயிற்சி பட்டறையில் இசை ஆர்வமுள்ள மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. முன்னதாக, தலைமை ஆசிரியர் குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார். மேலும் கோவை ஹரிதாஸ் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக,திண்டுக்கல் மனித நேய மக்கள் அறக்கட்டளையின் நிறுவனர் தலைவர் செல்வம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் மறைந்த திரைப்பட பின்னணி பாடகர்கள் எஸ் பி பாலசுப்ரமணியம் மற்றும் மலேசியா வாசுதேவன் ஆகியோருக்கு நினைவு கூறும் விதமாக அவர்களுடைய பாடல்கள் பாடப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். நிறைவில்,ஆசிரியை யசோதா நன்றி கூறினார். இந்நிகழ்வினை இராஜகானம் இசைக் குழுவின் ஆர்டிஸ்ட் லெனின் ஒருங்கிணைப்பு செய்தார். இதில், பாடகர்கள் கோவை சுகுணா, திவ்ய தர்ஷினி, ஸ்ரீதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story