கோவை: சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம் !

கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற்ற சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம்களில் மொத்தமாக 679 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 518 மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகள் வழங்கப்பட்டன.
கோவை மாவட்டம் முழுவதும் நேற்று நடைபெற்ற சிறப்பு மக்கள் குறை தீர்ப்பு முகாம்களில் மொத்தமாக 679 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 518 மனுக்களுக்கு உடனடியாக தீர்வுகள் வழங்கப்பட்டன, 161 மனுக்கள் மேல்நிலை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாம்களில், கருமத்தம்பட்டி மற்றும் பேரூர் உட்கோட்டங்களில் அவர் நேரில் பங்கேற்று நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டார். சட்ட ஆலோசகர்கள் மற்றும் பிற துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு வழிகாட்டியுள்ளனர். ஏற்கனவே பெற்ற மனுக்களும் நேரில் விசாரணை செய்யப்பட்டு, உரிய தீர்வுகள் வழங்கப்பட்டன.
Next Story