விழுப்புரம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

X
விழுப்புரம் நகராட்சியில் உள்ள 42 வார்டுகளில், 97 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் சம்பளத்தில் பிற்கால சேமநல நிதி பிடித்தம் செய்து 6 மாதங்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வருகிறது. தங்களின் சேம நல நிதியில் கையாடல் நடந்துள்ளதாக கூறி நேற்று காலை 11:00 மணிக்கு, நகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த விழுப்புரம் மேற்கு போலீசார் விரைந்து வந்து, துப்புரவு பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கடந்த 3 ஆண்டுகளாக சேம நல நிதியை வழங்காததால் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாகவும், நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதில் தங்களுக்கு சேர வேண்டிய பிற்கால சேமநல நிதியை உடனடியாக வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். நகர்நல அலுவலர் ஸ்ரீபிரியா, நகராட்சி உயர் அதிகாரிகளிடம் பேசி விரைவில் சேமநல நிதி கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு துப்புரவு பணியாளர்கள் கலைந்து சென்றனர்.
Next Story

