கிராமங்களில் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ

கிராமங்களில் குறைகளை கேட்டறிந்த எம்எல்ஏ
திருச்செங்கோடு ஒன்றியம், திருமங்கலம் ஊராட்சி, கருப்பக்கவுண்டம்பாளையம் பகுதியில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்கள் ஊர் பொதுமக்களை நேரில் சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்தார். நிகழ்ச்சிக்கு திருச்செங்கோடு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் சவின் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் பேசும்போது ஒவ்வொரு கிராமத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சியாகும் எனவேதான் நாங்கள் ஒவ்வொரு கிராமங்கள் தோறும் நேரடியாக சென்று அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறோம். திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி முழுவதும் இது போன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் உள்ள பொதுமக்களுக்கு இது போன்ற மக்கள் சந்திப்பு பயனுள்ளதாக அமைகிறது. எனவே பொதுமக்கள் தயங்காமல் தங்களது குறைகளை இது போன்ற நிகழ்வுகளில் தெரிவித்து பயனடைய வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறினார். நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில்,திருச்செங்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் சவின்,நாமக்கல் மேற்கு மாவட்ட இணை செயலாளர் லாவண்யா ரவி, மயில் ஈஸ்வரன்,திருச்செங்கோடு மேற்கு நகர செயலாளர் சேன்யோ குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரப்பன், நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஜெயக்குமார்,தினேஷ் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் கொமதேக நிர்வாகிகள் இருந்தனர்.
Next Story