காவேரிப்பாக்கத்தில் திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டம்

காவேரிப்பாக்கத்தில் திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
X
திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டம்
காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய தி.மு.க. மற்றும் ஒன்றிய இளைஞர் அணி சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணா நிதியின் 102-வது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகள் குறித்து விளக்கி பன்னியூர் கூட்ரோடு மற்றும் பாணாவரம் ஆகிய பகுதிகளில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய செயலாளர் எம்.தெய்வசிகாமணி தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் ஓச்சேரி எம்.பாலாஜி, ஒன்றிய அவைத்தலைவர் சண்முகம், துணை செயலாளர்கள் சங்கர், இந்துமதி செந்தாமரை, மாவட்ட பிரதிநிதி கோபி, ரவி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் தினகரன், கிளை செயலாளர்கள் விநாயகம், அண்ணாதுரை உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சையத்கலீம் வரவேற்றார். தலைமை கழக பேச்சாளர் கங்கா கலந்து கொண்டு தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளை விளக்கி பேசினார். இதில் பேரூர் செயலாளர் பாஸ் என்கிற நரசிம்மன், ஊராட்சி மன்ற தலைவர்கள் லோகநாயகி விநாயகம், லட்சுமி லோகநாதன், ருக்மணி தயாளன் உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வா கிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர்கள் சுரேந்தர், சாமந்தீஸ்வ ரன் ஆகியோர் நன்றி கூறினர்.
Next Story