குழந்தை திருமணம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட பெண்கள் பாதுகாப்பு மற்றும் குற்ற தடுப்பு பிரிவு சார்பில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, ஏ.டி.எஸ்.பி., திருமால் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் ராபின்சன், விஷ்ணுபிரியா முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் கீதா வரவேற்றார். நிகழ்ச்சியில், 18 வயது நிரம்பினால் மட்டுமே திருமணம் செய்து கொள்ள வேண்டும்; குழந்தை திருமணம் செய்வதால் ஏற்படும் பின்விளைவுகள்; இணையவழி குற்றம் மற்றும் சைபர் கிரைம் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருத்தல்; சாலை பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றுதல்; உள்ளிட்டவைகள் குறித்து பேசி, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story

