குறு மைய விளையாட்டு போட்டி

குறு மைய விளையாட்டு போட்டி
X
போட்டி
கள்ளக்குறிச்சியில் குறு மைய விளையாட்டு போட்டி ஆயத்தக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், திருக்கோவிலுார், சின்னசேலம். உளுந்துார்பேட்டை ஆகிய 5 குறு மையங்கள் உள்ளன. அப்பகுதியில் உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கான, குறுமைய விளையாட்டு போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.வாலிபால், கோ-கோ, கூடைப்பந்து, இறகு பந்து, பூப்பந்து, கால்பந்து உள்ளிட்ட குழு மற்றும் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தனி நபர்கள் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தாண்டிற்கான குறுமைய விளையாட்டு போட்டிகள் வரும் ஜூலை மாதம் துவங்க உள்ளது. இந்த போட்டிகளை நடத்துவதற்கான ஆயத்தக்கூட்டம் சமீபத்தில் நடந்தது. இந்திலி, தனியார் கல்லுாரியில் நடந்த கூட்டத்திற்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கி போட்டிகளை சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனை வழங்கினார். இதில் உடற்கல்வி ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
Next Story