திருமயம் :மணல் கடத்திய டாரஸ் லாரி பறிமுதல்!

திருமயம் :மணல் கடத்திய டாரஸ் லாரி பறிமுதல்!
X
குற்றச் செய்திகள்
திருமயம் தாலுகாவில் அரசு அனும்தியின்றி மணல், கிராவல் மண் வெட்டி லாரிகளில் கடத்தப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கனிமவளத்துறை அதிகாரி பெருமாள் லெனாவிலக்கு செல்லும் வாரியில் ஆய்வு செய்தார். அப்போது கிராவல் மண் ஏற்றி வந்த டாரஸ் லாரியை நிறுத்தி விசாரித்தபோது உரிய அனுமதி பெறாமல் எடுத்து செல்வது தெரியவந்தது. இதையடுத்து நமணசமுத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து லாரியை பறி முதல் செய்ததுடன், டிரைவர் கொத்தரியை சேர்ந்த சுகந்தன்(35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story