இளைஞரை கடித்த பாம்புடன் மருத்துவமனை வந்த உறவினர்கள்!
ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி ராஜா குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்பவரது மகன் முகிலன்(27). இவர் நேற்று இரவு வீட்டில் குளித்துவிட்டு வரும்போது அவரை பாம்பு ஒன்று கடித்துள்ளது. இதனையடுத்து பதறிய முகிலனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் முகிலனை கடித்த பாம்புடன் முகிலனையும் அழைத்துக் கொண்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு சென்றனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story





