பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையை அகலபடுத்திட வேண்டும் -
பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையை அகலபடுத்திட வேண்டும் - பெரம்பலூர் SDPI கட்சி மாவட்ட செயற்குழுவில் தீர்மானம். பெரம்பலூர் மாவட்டம் SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது... இக்கூட்டத்தினை மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது அபுதாஹிர் வரவேற்புரை வழங்கி துவங்கி வைத்தார்... மாவட்ட தலைவர் முஹம்மது ரபீக் அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்கள்.. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளரும், திருச்சி மண்டல பொறுப்பாளருமான ஷபீக் அஹமது அவர்கள் வருகை புரிந்திருந்தார்கள்... மேலும் மாவட்ட துணைத் தலைவர் முஹம்மது பாரூக், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் அப்துல் கனி, மாவட்ட செயலாளர்கள் அபூபக்கர் சித்திக், அஸ்கர் அலி, செயற்குழு உறுப்பினர் ஷாஜஹான், பெரம்பலூர் தொகுதி தலைவர் AMR முஹம்மது ரபீக் ஆகியோர் கலந்து கொண்டனர்... இக்கூட்டத்தில் நிறைவேற்ற பட்ட தீர்மானங்கள் : ஜூன் 21 கட்சியின் அமைப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் கொடியேற்றம், நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மரக்கன்றுகள் நடுவது மற்றும் வழங்குவது பெரம்பலூர் நகரின் பிரதான சாலையாகவும், உழவர் சந்தை, நகரின் பெரிய பள்ளிவாசலான நூர் பள்ளிவாசல், பிரசித்தி பெற்ற விநாயகர் கோவில், 3 பள்ளிக்கூடங்கள், 5க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் என எப்போதும் பரபரப்பாக இயங்ககூடிய பெரம்பலூர் - வடக்கு மாதவி சாலையை அகலபடுத்தி சீரமைக்க மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் முறையிடுவது . பெரம்பலூர் நகர்புறத்தில் கொள்ளை சம்பவங்களை தடுக்க இரவு ரோந்துவினை அதிகப்படுத்த காவல்துறையிடம் முறையிடுவது போன்ற பல கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
Next Story



