மண்டைக்காடு: பள்ளி கட்டிடம் அடிக்கல் நாட்டு

X
இந்துசமய அறநிலையத்துறை சார்பில் தேவஸ்தான வாரியத்தால் நடத்தப்படும் குமரி மாவட்டம், மண்டைக்காடு தேவஸ்தான மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.42 கோடி மதிப்பில் 8 புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா குத்துவிளக்கேற்றி தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசுகையில்- இப்பணிகளை விரைந்து முடித்து, மாணவ மாணவியர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மண்டைக்காடு திருக்கோவில் மேலாளர் செந்தில்குமார், பள்ளி தலைமையாசிரியர் சிவராம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
Next Story

