மின் கோபுரத்தில் ஏறி விவசாயி போராட்டம் பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சூரியமீனுக்கன் கிராமத்தில் தனியார் சோலார் நிறுவனத்தின் சார்பில் அங்குள்ள கண்மாய் பகுதியில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கண்மாய் பகுதியில் அமைக்கப்படுவதால் நீர் நிலைபாதிப்புக்குள்ளவாது மட்டுமின்றி, விவசாயம்,கால்நடைகள் பாதிக்கப்படும் சூழ்நிலை இருப்பதால் கண்மாய் பகுதியில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதே கிராமத்தினை சேர்ந்த சரவணன் என்பவர் பணிகள் நடைபெற்று வரும் 130 அடி உயரமுள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் ஏறி டன் கைவிட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பாஜக கயத்தார் மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சரவணணுடன் கயத்தார் தாசில்தார் சுந்தர ராகவன், கோவில்பட்டி டி.எஸ்.பி ஜெகநாதன் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Next Story



