முருகன் கோவில் மற்றும் தர்காவுக்கு சென்ற திருமாவளவன்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் மற்றும் தர்காவிற்கு திருமாவளவன் சென்றார்.
மதுரைக்கு நேற்று மாலை வந்த விசிக கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இன்று (ஜூன் .19) காலை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார். திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்த கையோடு அருகில் உள்ள சிக்கந்தர் அவுலியா பாதுஷா பள்ளிவாசலுக்கு தொல் திருமாவளவன் சென்றார். அங்கு தர்கா நிர்வாகிகளிடம் பேசினார். மதுரையில் வரும் 22 ஆம் தேதி முருக மாநாடு நடைபெறவுள்ள சூழ்நிலையில் இன்று திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவிலுக்கும் தர்காவிற்கும் திருமாவளவன் சென்றது பேசப்பட்டு வருகிறது
Next Story