செந்துறையில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து சிபிஎம் கட்சியினர் இரண்டு சக்கர வாகன பிரச்சாரம் இயக்கம்.

X
அரியலூர், ஜூன்.19- செந்துறையில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாகனப் பிரச்சாரம் இயக்கம் செந்துறை பேருந்து நிலையத்தில் வட்ட செயலாளர் கு.அர்ஜுனன் தலைமையில் நடைபெற்றது. 2 சக்கர வாகன பிரச்சாரத்தை சிபிஎம் கட்சி மாநில குழு உறுப்பினர் எம்.ஜெயசீலன் தொடங்கி வைத்தார். பிரச்சாரத்தில் சிபிஎம் கட்சி மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மணிவேல், எ.கந்தசாமி, பி.துரைசாமி, துரை.அருணன் ஆகியோர் கண்டனம் உரை நிகழ்த்தினர். பிரச்சாரத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர்கள் இ.பன்னீர்செல்வம், ஜி.செண்பகவல்லி, பி.பத்மாவதி, எம் சீமான், க.அறிவழகன், க.முருகானந்தம், உ.ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர். பிரச்சாரத்தில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, ஜிஎஸ்டி வரிக் கொள்கையை நிறுத்த வேண்டும், 100 நாள் வேலை திட்டத்திற்கு போதுமான நிதியை ஒதுக்க வேண்டும், சமையல் எரிவாயு பெட்ரோல் டீசல் உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை நிறுத்த வேண்டும் பிஜேபி அல்லாத மாநில அரசுகளுக்கு நிதி உதவிக்கு பதில் பாரபட்சம் காட்டக்கூடாது, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வாக்கும் போக்கை நிறுத்த வேண்டும், மின் கட்டண விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், மாதாந்திர மின் கட்டண அளவீடு மேற்கொண்டு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை கைவிட வேண்டும், அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் , உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும், சொத்து வரி உயர்வு மற்றும் குடிநீர் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், பெண் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த வேண்டும், அனைத்து அதிவிரைவு ரயில்களும் செந்துறையில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், செந்துறை நகர் முழுவதும் அனைத்து தெருக்களிலும் தார் சாலை அமைக்க வேண்டும், செந்துறை தாலுகா அலுவலகத்தில் சர்வே செக்க்ஷனில் நில வரைபட பதவி இரண்டு மாத காலமாக காலியாக உள்ளது எனவே காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், முந்திரி கொட்டை 80 கிலோ மூட்டைக்கு 15,000 விலை நிர்ணயம் செய்ய வேண்டும், தொழிலாளர் நலவாரிய அலுவலகத்தில் அனுப்பப்படும் விண்ணப்பங்களை ஒரு வாரத்தில் பார்த்து உடனடியாக கல்வி, திருமணம், குடும்ப தலைவர் நிதியை பட்டுவாடா செய்ய வேண்டும், உடையான்குடிகாடு கிராமத்தில் மோடி திட்டத்தின் மூலம் வீடு கட்டும் தொழிலாளர்களுக்கு 6 மாத காலமாக நிதி வழங்காமல் உள்ளது அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், கைத்தறி நெசவாளர்களுக்கு 11 ரக இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும், உடையான்குடிகாடு எஸ்டி மக்களுக்கு மாற்று இடம் ஆர்.எஸ்.மாத்தூர் பாதையில் வழங்கப்பட்டுள்ளது ஆனால் குடிநீர்வசதி, சாலைவசதி மின்சார வசதி ஆகிய எந்த வசதியும் ஏற்படுத்தி தரவில்லை எனவே அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், உஞ்சினி கிராமத்தில் அரசு பள்ளி எதிரில் உள்ள மினி டேங்க் 6 மாத காலமாக பழுதடைந்துள்ளது அதனை உடனடியாக சீரமைக்க வேண்டும், உஞ்சினி 3, 5, 7 வார்டுகளில் மின்சார பற்றாக்குறை உள்ளதை புதிய மின்மாற்றி அமைத்துக் கொடுத்து பற்றாக்குறையை சீர் செய்ய வேண்டும், செந்துறை முந்திரி விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் அரசு முந்திரி தொழிற்சாலை அமைத்து கொடுக்க வேண்டும், செந்துறை பகுதியில் மாணவ, மாணவிகள் நலன் கருதி அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், செந்துறை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவரை பணியில் அமர்த்த வேண்டும், பொன்பரப்பி இரும்புலிகுறிச்சி பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் உடனடியாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும், சிறுகடம்பூர் மற்றும் அனைத்து துவக்க பள்ளிகளுக்கும் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும், சின்னஆனந்தவாடி கிராமத்திற்கு குடிநீர் வசதி, சாலை வசதி, இடுகாடு வசதி செய்து தர வேண்டும், உஞ்சினி கிராமத்தில் அருகில் செட்டிநாடு சிமெண்ட் ஆலையால் வெட்டி எடுக்கப்பட்ட சுண்ணாம்புக்கல் குழியை உடனடியாக மூடி மரக்கன்றுகள் நட வேண்டும், இலங்கைச்சேரி கிராமத்தில் உள்ள நான்கு தெருக்களிலும் சாக்கடை சாலையில் ஓடுவதால் சாக்கடை கால்வாய் சீரமைத்து சுகாதாரம் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 சக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது, பிரச்சாரமானது செந்துறை பஸ் நிறுத்தத்தில் துவங்கி முக்கிய வீதிகளின் வழியாக பல்வேறு மருதூர், பொன்பரப்பி, உஞ்சினி, நல்லாம்பாளையம், சிறு கடம்பூர், இரும்புலிக்குறிச்சி, குமிழியம் வாலரைக்குறிச்சி, ஆனந்தவாடி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு சென்று மீண்டும் செந்துறை பஸ் நிறுத்தத்திற்கு வந்து முடிவடைந்தது.இதில் செந்துறை சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த கிளைச் செயலாளர்கள், முன்னணி ஊழியர்கள், கட்சியின் மூத்த, முக்கிய நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர். 
Next Story

