ஊனமுற்றவர்களுக்கான உதவித் தொகை வழங்குவதை திடீரென்று நிறுத்தியதால்

X
நாகை மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் விழுந்தமாவடி வட பாதியை சேர்ந்தவர் ராமசாமி என்பவரது மகன் செல்வராஜ். இவர் நாகை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி உள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது நான் பிறவியிலேயே ஊனமுற்றவன். எனது ஊனமுற்றவர் அடையாள அட்டை எண் NG.P.LD294. ஊனமுற்றவர்உதவித்தொகை எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இந்நிலையில், திடீரென்று 2004 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல், உதவித் தொகை வழங்குவதை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனக்கு திடீரென்று ஊனமுற்றோர் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டது குறித்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்திலும், கீழ்வேளுர் வட்டாட்சியரிடம் விளக்கம் கேட்டு மனு செய்தேன். ஆனால் இதுவரை எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஊனமுற்றவர்களுக்கான உதவித் தொகை நிறுத்தப்பட்டதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளேன். எனவே, ஊனமுற்றவர்களுக்கான உதவித்தொகையை மீண்டும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story

