தஞ்சாவூர் மாவட்டத்தில், மீன் வளர்ப்புக்கு மானியம்

தஞ்சாவூர் மாவட்டத்தில், மீன் வளர்ப்புக்கு மானியம்
X
மீன் வளர்ப்பு
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் 2025 – 26 ஆம்  ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மானிய கோரிக்கையில் அறிவிப்பு எண்.22-ல் தெரிவிக்கப்பட்டவாறு மாவட்ட மீன்வளர்ப்போர்  மேம்பாட்டு  முகமை  உறுப்பினர்களுக்கு  50  லட்சம்  ரூபாய்  மீன் வளர்ப்பு உள்ளீட்டு  மானியமாக  வழங்கப்படும் திட்டம்  அறிவிப்பு  செய்யப்பட்டு, திட்டத்தினை மாவட்ட  மீன்வளர்ப்போர்  மேம்பாட்டு  முககையின் நிதியிலிருந்து செயல்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திற்கு  2025 – 26 ஆம் ஆண்டிற்கு மீன்விரலிகளுக்கு மானியம் வழங்குதல் திட்டத்தில் மொத்தம் 250 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மேலும், தஞ்சாவூர் மாவட்ட மீன்வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் உறுப்பினராக உள்ள மீன்வளர்ப்பு விவசாயிகளுக்கு  ஒரு ஹெக்டருக்கு 10,000 மீன்விரலிகள் கொள்முதல் செய்திட ஆகும்  செலவினத்தில்  ரூ.5000/- (ரூபாய் ஐந்தாயிரம் மட்டும்)  பின்னேற்பு மானியமாக  வழங்கப்படும். இத்திட்டத்தில் மானியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் தஞ்சாவூர், கீழவாசல் எண்.8/734 அறிஞர் அண்ணாசாலை என்ற முகவரியில் இயங்கும் தஞ்சாவூர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களுடன்  18.07.2025-க்குள் விண்ணப்பம்  செய்திட  வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Next Story