முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா

X
Komarapalayam King 24x7 |19 Jun 2025 6:52 PM ISTகுமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
குமாரபாளையம் பெரியார் நகர் பகுதியில் முன்னாள் அமைச்சர் கக்கன் பிறந்தநாள் விழா , விடியல் ஆரம்பம் சார்பாக, அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. கக்கனின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாணவ மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டு, இதில் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது. மாணவி மாணவிகளுக்கு கக்கன் குறித்து, சமூக ஆர்வலர் வேலுச்சாமி எடுத்துரைத்தார். இவர் பேசியதாவது: கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார். காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது, கக்கன் அந்தப் பதவியை ஏற்றார். 1957 ல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்றுக் கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். , 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார். இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது, அதில் சுமார் 70 மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டால் இறந்தனர். இவ்வாறு அவர் பேசினார். மாணவ மாணவிகள் கக்கன் போல் நேர்மையாக வாழ்வோம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். இதில் சௌந்தர், கோபாலகிருஷ்ணன், உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
