எம்.பி. அமைச்சர், கலெக்டர் பங்கேற்ற பட்டாக்கள் வழங்கும் முகாம்

எம்.பி. அமைச்சர், கலெக்டர் பங்கேற்ற பட்டாக்கள் வழங்கும் முகாம்
X
குமாரபாளையத்தில் நடந்த பட்டா வழங்கும் முகாமில் எம்.பி. அமைச்சர், கலெக்டர் பங்கேற்றனர்.
குமாரபாளையத்தில் நடந்த பட்டா வழங்கும் முகாமில் எம்.பி. அமைச்சர், கலெக்டர் பங்கேற்றனர். மக்களுடன் முதல்வர் முகாம் மூன்றாம் கட்டமாக நடந்த போது விண்ணப்பித்த பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் உமா தலைமையில், குமாரபாளையம் அருகே, தட்டான்குட்டை ஊராட்சி, சமுதாய கூடத்தில் நடந்தது. இதில் ஆதி திராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஈரோடு எம்.பி. பிரகாஷ், நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மூர்த்தி, உள்பட பலர் பங்கேற்றனர். இந்த முகாமில் இலவச வீட்டுமனை கேட்டு விண்ணப்பித்த 124 நபர்களுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டன. பட்டாக்கள் பெற்றுக்கொண்ட பயனாளிகள் தமிழக முதல்வர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர். தாசில்தார் சிவகுமார், ஆர்.ஐ. புவனேஸ்வரி, வி.ஏ.ஓ.க்கள் முருகன், செந்தில்குமார், தியாகராஜன், தேவராஜ், அரசு உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story