இளம் பெண் மாயம் போலீசார் விசாரணை

X
Komarapalayam King 24x7 |19 Jun 2025 7:07 PM ISTகுமாரபாளையத்தில் இளம் பெண் மாயமான வழக்கில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
குமாரபாளையம் நடராஜா நகர் பகுதியில் வசித்து வருபவர் மயூரி, 21. வீட்டில் இருந்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் காலை 07:00 மணியளவில் வெளியில் சென்று வருவதாக கூறிச் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகள் மற்றும் இதர இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை, ஆகவே, இவரது தாயர் மகேஸ்வரி, 45, குமாரபாளையம் போலீசில் தன் மகள் மயூரியை கண்டுபிடித்து தருமாறு புகார் மனு கொடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன மயூரியை தேடி வருகின்றனர்.
Next Story
