நாய்கள் கடித்ததில் வயிற்றில் இருந்த குட்டிகளுடன் ஆடு பலி

X
மன்மனார்குடி அருகே நாலாநல்லூர் கிராமத்தைசேர்ந்த விவசாயி சின்னையன் வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார் இந்நிலையில் இன்று காலை இவரது ஆடுகளில் ஒன்றை தெரு நாய்கள் சேர்ந்து கடித்ததில் படுகாயமடைந்த ஆடு சம்பவ இடத்திலேயே பலியானது.நாய்கள் ஆட்டின் வயிற்றை கடித்துக் குதறியதில் வயிற்றில் இருந்த இரு குட்டிகளும் இறந்தது.தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும் அதன் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. தெரு நாய்கள் அதிகரிப்பால் வீட்டில் வளர்க்கும் கால்நடைகள் மட்டுமின்றி குழந்தைகள், பெரியோர்கள் என அனைவரையும் பாதிக்கிறது.அரசு தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
Next Story

