ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவக்க வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

மின்வாரியத்தில் 40,000 ஆரம்பக்கட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.2023 டிசம்பர் 1 ம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும்.ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்கவேண்டும்.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே துவக்க வலியுறுத்தி சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மின்வாரிய பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் பெரம்பலூர் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரியத்தில் 40,000 ஆரம்பக்கட்ட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.2023 டிசம்பர் 1 ம் தேதி முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும்.ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு மின்வாரியமே நேரடியாக தினக்கூலி வழங்கவேண்டும். கேங்மேன் பணியாளர்களுக்கு ஊர் மாற்றம், கள உதவியாளர் பதவி மாற்றம், 6 சதவீத ஊதிய உயர்வு வழங்கவேண்டும். மின் நுகர்வோரை பாதிக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிடவேண்டும். விடுபட்ட பகுதி நேரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். கணக்கீட்டு பணியாளர்கள் கணக்கீட்டு பணி செய்ய மொபைல் அல்லது டேப் வாரியமே வழங்கவேண்டும் பெரம்பலூர் வட்டத்தில் வாரிய விதிமுறைகளுக்கு எதிராகவும், நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கையை கை விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். திருச்சி மண்டல செயலாளர் அகஸ்டின், மாநில செயற்குழு உறுப்பினர் இளங்கோவன் விளக்கவுரை ஆற்றினார். பெரம்பலூர் கோட்ட நிர்வாகிகள் நல்லுசாமி, மணி, பாலகிருஷ்ணன், தினேஷ், அண்ணாதுரை ,கோட்ட செயற்குழு உறுப்பினர்கள் நீலமேகம், ராஜா, ரெங்கநாதன் தர்மராஜ், சதீஷ் குமார், ரெங்கதுரை, சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story