பெரியகொத்தூரில் அரசு டாஸ்மார்க் கடை அமைக்கும் முடிவை கைவிட கோரிக்கை

X
திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் அருகே பெரியகொத்தூர் பகுதியில் ஏற்கனவே அரசு டாஸ்மார்க் மதுபான கடை செயல்பட்ட போது அதனால் பொதுமக்கள் மாணவர்கள் என பலருக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டது இதனால் அந்த கடை வேற இடத்திற்கு மாற்றப்பட்டது இந்நிலையில் பெரியகொத்தூர் பகுதியில் ஏற்கனவே டாஸ்மார்க் கடை இருந்த இடத்தில் மீண்டும் மதுபான கடை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இதனை அறிந்த கிராம மக்கள் இன்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர் அதில் பெரியகொத்தூர் பகுதியில் மீண்டும் டாஸ்மார்க் கடை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
Next Story

