புகலூர் அதிகப்படியாக வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்து தற்கொலை.
புகலூர் அதிகப்படியாக வாங்கிய கடனை கட்ட முடியாததால் விஷம் குடித்து தற்கொலை. கரூர் மாவட்டம் , புகலூர் தாலுகா , ஹை ஸ்கூல் மேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் வயது 57. இவர் கரூர் நீதிமன்றத்தில் ஓ.ஏ.வாக பணியாற்றி வந்தார். இவர் தனது மகன் படிப்புக்காகவும்,இதர செலவுக்காகவும் அதிகப்படியாக வாங்கிய கடனை கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த சிவக்குமார் ஜூன் 17ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் அவரது வீட்டின் அருகாமையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அவரது மனைவி ஜானகி வயது 50 என்பவர் தனது கணவனை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த சிவகுமாரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story




