நீடாமங்கலம் அருகே பழுதடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

X
நீடாமங்கலம் வெண்ணாறு பாலத்தின் தென் கரையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மூணாறு தலைப்பு அணைக்கு செல்ல போடப்பட்ட தார் சாலை பழுத்தடைந்துள்ளது.தற்போது அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அணைக்கு சென்று ஆய்வு செய்யவும், விடுமுறை நாட்களில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இந்த சாலையை பயன்படுத்தி அணைக்கும் வந்து ஆறுகளில் சீறிப்பாயும் தண்ணீரை பார்த்து செல்கின்றனர். நீடாமங்கலத்தில் இறந்தவர்களை எரியூட்டும் மயானமும் இந்த சாலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது மேலும் நடுபடுகை கிராம மக்களும் இந்த குண்டும் குழியுமான சாலையை பயன்படுத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை நேரில் பார்வையிட்டு அகலப்படுத்தி சீரமைக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்
Next Story

