நடையனூர் - பெற்றோரை இழந்த இளைஞர்.மது போதையில் தூக்கிட்டு தற்கொலை.

நடையனூர் - பெற்றோரை இழந்த இளைஞர்.மது போதையில் தூக்கிட்டு தற்கொலை.
நடையனூர் - பெற்றோரை இழந்த இளைஞர்.மது போதையில் தூக்கிட்டு தற்கொலை. சேலம் மாவட்டம், வாழப்பாடி , நாடார் தெருவை சேர்ந்தவர் சூரிய பிரகாஷ் வயது 21.இவரது சகோதரர் விஜயகுமார் வயது 24. இவர்கள் குழந்தை பருவத்தில் இருக்கும் போதே இவர்களது பெற்றோர் காலமாகிவிட்டனர். இதனால் கரூர் மாவட்டம் , வேலாயுதம்பாளையம் அருகே நடையனூர் பகுதியில் தனியார் நிறுவனத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார் சூரிய பிரகாஷ். இந்நிலையில் ஜூன் 17ஆம் தேதி இரவு 10:30 மணி அளவில் மது போதையில் இருந்த சூரிய பிரகாஷ் , தனது பெற்றோர் காலமாகி போனதை நினைத்து விரக்தி அடைந்த அவர் அப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தார். இதனை அறிந்த அவரது சகோதரர் விஜயகுமார் தனது தம்பியை மீட்டு வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். , அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக விஜயகுமார் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த சூரிய பிரகாஷின் உடலை அதே மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story