சூதாட்டம் ஆடி நஷ்டமடைந்த நபர் தற்கொலை

X
Komarapalayam King 24x7 |19 Jun 2025 9:36 PM ISTகுமாரபாளையத்தில் சூதாட்டம் ஆடி நஷ்டமடைந்த நபர் தற்கொலை செய்து கொண்டார்
.குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் வசித்து வந்தவர் கார்த்தி, 36. தனியார் நிறுவன பணியாளர். இவருக்கு ஆண் லைன் சூதாட்டம் ஆடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் இவரது மனைவி, ராஜேஸ்வரி, 32, பலமுறை கண்டித்துள்ளார். இதனால் பல இடங்களில் கடன் வாங்கி, மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். பலமுறை வீட்டை விட்டு வெளியில் சென்று, இரண்டு நாட்களில் திரும்பி வந்தும் உள்ளார். நேற்றுமுன்தினம் வெளியில் சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. சரி, வழக்கம் போல இரண்டு நாளில் வந்து விடுவார் என்று இருந்துள்ளனர். நேற்று அதிகாலை 05:30 மணியளவில், வீட்டுக்கு வந்து ஸ்டோர் ரூமிற்கு சென்று கதவை தாழிட்டு கொண்டார். இவரது உடன் பணியாற்றும் நபர்கள் வந்த போது, ராஜேஸ்வரி கதவை தட்ட, கதவு திறக்கவில்லை., அதனால் அவர்கள் சென்று விட்டனர். பால் ஊற்ற வந்த நபர், ஏணி வைத்து ஏறி, உள்ளே பார்த்த போது, மின் விசிறியில் சேலையால் தூக்கில் தொங்கிய நிலையில் கார்த்தி இருந்துள்ளார். உடனே அக்கம் பக்கம் உள்ள நபர்களின் உதவியுடன் கதவை உடைத்து, கார்த்தியை கீழே இறக்கி, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக் கொண்டு வந்து காட்டிய போது, பரிசோதித்த டாக்டர், கார்த்தி இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து, ராஜேஸ்வரி குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
