கோவை: கல்வியை தொடர முடியாமல் இருந்த மாணவி - ஆட்சியர் உதவி
கோவை மாவட்டம் வாரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நட்சத்திரா, தந்தையை இழந்ததால் கல்வியைத் தொடர முடியாமல் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். இதை கவனித்த மாவட்ட ஆட்சியர் பவன்குமார், அவரை அரசூரில் உள்ள தனியார் கல்லூரிக்கு இரவு 7 மணிக்கு அழைத்து சென்று உடனடியாக கல்லூரியில் சேர வைத்தார். மேலும், அனைத்து கல்விச் செலவையும் தாம் ஏற்க உறுதியளித்தார். இந்நிகழ்வு, அந்த பகுதி மக்களில் நெகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Next Story



