சந்தன மரம் திருட்டு - ஒருவர் கைது !

X
கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நீதிபதிகள் குடியிருப்பில் இருந்து ஐந்து சந்தன மரங்கள் வெட்டப்பட்டு கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீதிபதி நம்பிராஜ் தங்கியிருந்த வீட்டிலிருந்து நான்கு மரங்கள் திருடப்பட்டு, ஒன்று விடப்பட்டிருந்தது. போலீசாரின் விசாரணையில், தேனி உத்தமபாளையத்தைச் சேர்ந்த வினோத் மற்றும் அவரது கூட்டாளிகள் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என தெரியவந்தது. இதில் வினோத் நேற்று கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Next Story

