நெடுஞ்சாலை பகுதியில் கோவில் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு கோட்டப்பொறியாளரிடம் மனு கொடுத்தனர்

நெடுஞ்சாலை பகுதியில் கோவில் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு கோட்டப்பொறியாளரிடம் மனு கொடுத்தனர்
X
சிவன்மலை ஊராட்சி பெருமாள் மலை பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலை பகுதியில் கோவில் கட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கோட்ட பொறியாளரிடம் மனு கொடுத்தனர்
காங்கேயம் அடுத்துள்ள பெருமாள்மலை பகுதியில் உள்ள நெடுஞ்சாலை பகுதியில் கோவில் கட்ட எதிர்ப்பு தெரிவித்து பெருமாள்மலை கிராம மக்கள் மனு அளித்துள்ளனர் இது குறித்து காங்கயம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் வடிவேல்குமாரனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- சிவன்மலை ஊராட்சி பெருமாள்மலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் கோவில் கட்ட, நெடுஞ்சாலைத்துறை அனுமதி அளித்ததாக கூறிக்கொண்டு சிலர் அந்த பகுதியில் கோவில் கட்ட முயற்சி செய்து வருகின்றனர். மேலும் அந்த இடத்திற்கு அருகில் குடியிருப்புகள் உள்ளது. அங்கு கோவில் கட்டினால் மக்கள் அன்றாட பயன்பாட்டிற்கு இடையூறாக இருக்கும். சாலை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தெரிகிறது. எனவே வேறு இடத்தில் கோவில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story