கோவை: திமுக ஐடி விங் மீது அதிமுகவினர் புகார் !

கோவை: திமுக ஐடி விங் மீது அதிமுகவினர் புகார் !
X
கீழடி ஆய்வுகள் சம்பந்தமாக திமுக ஐடி விங்க் பதிவிட்டதற்கு, அதிமுகவினர் புகார்.
கீழடி ஆய்வுகள் சம்பந்தமாக திமுக ஐடி விங்க் கடந்த 17ம் தேதி அவர்களது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில் வாயைத் திறந்து பேசுங்கள் பழனிசாமி, கீழடி ஆய்வுகள், ஆறு நூற்றாண்டுகள் பழமையானது என்பதை சர்வதேச அறிவியல் ஆய்வுகள் உறுதிப்படுத்தினாலும், தமிழர்களின் தொன்மையையும், வரலாற்றையும் ஏற்றுகொள்ள முடியாத ஒன்றிய பாஜக அரசு வரலாற்றை மாற்றவும், மறைக்கவும் முயற்சி செய்து வருகிறது. பல்லாயிரமாண்டு வரலாறுக்காக ஒட்டுமொத்த தமிழ்நாடும் போர்குரல் எழுப்பிவரும் நிலையில், தினமும் அரைவேக்காட்டுத்தனமாக அறிக்கை அரசியல் செய்து வரும் பழனிசாமியின் கண்களுக்கு இதெல்லாம் தெரியவில்லையா? இல்லை எஜமானர் பழைய வழக்குகளையெல்லாம் தூசிதட்டி எடுத்துவிடுவார் என்ற பயமா? வாய்திறந்து சொல்லுங்கள் பழனிசாமி ? என்றும் அதன் கீழ் எடப்பாடி பழனிச்சாமியின் கேலிச்சித்திர புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளனர். இதனை கண்டித்தும் அந்த பதிவை நீக்குவதற்கு காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அதிமுக கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவினர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர்.
Next Story