பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம்

பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு இன்ஸ்டாகிராம் காதல் ஜோடி தஞ்சம்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தொகுதி மாரண்டல் எடுத்த சிரியம்பட்டி பகுதியை சேர்ந்த கட்டிட மேஸ்திரி அருள்குமார் கிருஷ்ணகிரி மாவட்டம் சங்கீதா இருவரும் கடந்த ஆறு மாதங்களாக இன்ஸ்டாகிராம் வழியாக பழகி காதலித்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர் குடும்பத்தினரும் இந்த திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் நேற்று மாலை பாலக்கோடு மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர் இரண்டு தரப்பு குடும்பத்தினரையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் சங்கீதாவை அருள்குமார் உடன் அனுப்பி வைத்தனர் இன்ஸ்டாகிராம் காதலில் திருமணம் செய்த ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்ததை எடுத்து அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story