கோவை: கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உதவி

கோவை: கல்லூரியில் சேராத மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் உதவி
X
50-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை ஆட்சியரிடம் வழங்கினர்.
கோவை மாவட்டத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரடியாக அழைத்து பேசி, அவர்களுக்கு கல்வி உதவிகள் மற்றும் வழிகாட்டுதலை வழங்குவதாக உறுதியளித்தார். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத்தேர்வுக்கான ஏற்பாடுகள் செய்ய பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளன. பொருளாதார பிரச்சினையால் உயர் கல்விக்கு செல்ல முடியாதவர்களுக்கும் உதவி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார். இதையடுத்து நேற்று நடைபெற்ற முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை ஆட்சியரிடம் வழங்கினர்.
Next Story