கோவில், பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

கோவில், பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை
X
தூத்துக்குடியில் கோவில், பள்ளி அருகே உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் பள்ளி, கோவில் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் கணேசன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில் "தூத்துக்குடி எஸ்.ஏ.வி., பள்ளியின் மேல் பக்கம் சுமார் 50 மீட்டர் தூரத்திலும், சிவன் கோவில் அருகே 100 மீ தூரத்திலும் டாஸ்மாக் மதுபானக்கடை அமைந்துள்ளது. இந்த கடையை மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. தற்போது திமுக அரசு மதுபானங்கள் சில்லரை விற்பனை விதிகளில் திருத்தம் செய்துள்ளதாக அறிகிறோம். எனவே எங்களது கோரிக்கையை பரிசீலித்து 30 நாட்களில் மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
Next Story