சுய வேலை வாய்ப்பு பயிற்சி

சுய வேலை வாய்ப்பு பயிற்சி
X
பயிற்சி
மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சி அளிக்கப்படுவதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு: மாவட்டத்தில் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம், 19-45 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்கு, 64 வகையான சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இதற்கு 8ம் வகுப்பு முதல், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்ட படிப்பு வரை கல்வி தகுதிக்கு ஏற்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.மேலும், நிறைமதி கிராமத்தில் உள்ள மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனர் அலுவலகம் மற்றும் 9952322947 ல் தொடர்பு கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு கட்டணமில்லா எண் 155330, 1900 309 9039 மூலம் அறியலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Next Story