அகரம் ஊராட்சிகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்யும் துாய்மை பணியாளர்கள்.

அகரம் ஊராட்சிகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்யும் துாய்மை பணியாளர்கள்.
X
அகரம் ஊராட்சிகளில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி பணி செய்யும் துாய்மை பணியாளர்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேலும் இங்குள்ள கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மூன்று வழி சாலையில் அருகே குப்பை தொட்டியில் போடுகிறார்கள். இதை அகரம் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளி தூய்மை படுத்தி வருகின்றனர். சில சமூக விரோதிகள் மது குடித்து விட்டு பாட்டில்கள் உடைத்து வீசுவதால் இவற்றை வெறும் கைகளினால் அகற்றும் போது பணியாளர்கள் கைகளில் ரத்த காயங்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் தூய்மை பணியாளர்களுக்கு அகரம் ஊராட்சி சார்பில் கை உறைகள் தராததால் கையிலேயே குப்பைகளை அள்ளுகின்றன. அகரம் ஊராட்சியில் கை உறை கொடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். தூய்மை பணியாளர்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக சாம்மந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தூய்மை பணியாளர்களு பாது காப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களின் எதிர்பார்பாக உள்ளது.
Next Story