தனியார் பேருந்து ஓட்டுனர் அதிக ஒலி எழுப்பும் ஆரன் அடித்ததால் சாலையில் பயணம் செய்த பயணிகள் ஆவேசம். பேருந்தில் அதிக ஒலி ஒலிப்பான்கள் அகற்றம்

தனியார் பேருந்து ஓட்டுனர் அதிக ஒலி எழுப்பும் ஆரன் அடித்ததால் சாலையில் பயணம் செய்த பயணிகள் ஆவேசம். பேருந்தில் அதிக ஒலி ஒலிப்பான்கள் அகற்றம்
X
தனியார் பேருந்து ஓட்டுனர் அதிக ஒலி எழுப்பும் ஆரன் அடித்ததால் சாலையில் பயணம் செய்த பயணிகள் ஆவேசம். பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்தில் அதிக ஒலிகளுக்கும் ஒலிப்பான்களை அகற்ற வேண்டும் என முற்றுகை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பல்லடம் நோக்கி சென்று விட்டு மீண்டும் பல்லடத்தில் இருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த செல்வகுமார் என்ற தனியார் பேருந்தை மனக்கடவு பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் மணிகண்டன் வயது 31 என்பவரும் அதே பேருந்தை பேருந்து நடத்துனராக கார்த்திக் 31 என்பவர் பணியாற்றி வருகிறார். தனியார் பேருந்து கோனாபுரம் பிரிவு பகுதியில் இருந்து தாராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்த போது பேருந்துக்கு முன்னால் வந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் யோகேஸ்வரன் என்பவரது ஓவர் டெக் செய்வதற்காக தனியார் பேருந்து ஓட்டுனர் அதிக ஒலி எழுப்பும் ஆரன்களை பயன்படுத்தி காருக்கு இடையூறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் யோகேஸ்வரன் தாராபுரம் பேருந்து நிலையத்தில் பேருந்து முன் தனது ஆதரவாளர்களுடன் தனியார் பேருந்து முற்றுகையிட்டு தனியார் பேருந்தில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஆரன்களை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தனியார் பேருந்து முற்றுகையிட்டார் இதனால் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்ததின் தொடர்ந்து தாராபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தனியார் பேருந்து அதிக ஒலிகளுக்கும் ஆரன்களை தனியார் பேருந்து ஓட்டுனர் அப்புறப்படுத்தினார். இதனால் சிறிது நேரம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தாராபுரம் பகுதியில் உள்ள அனைத்து தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஆரங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தனியார் பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஆரன்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
Next Story