சமூக ஆர்வலரை வீட்டில் கொலை முயற்சி

X
குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் அஜயகுமார் (49). முன்னாள் வில்லுக்குறி பேரூராட்சி பாஜக கவுன்சிலர் மற்றும் சமூக ஆர்வலர் இவர் கடந்த ஆண்டு முதுகெலும்பு பிரச்சனைக்காக சொந்த வீட்டை விற்று தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த நிலையில் அஜயகுமார் நேற்று மாலை வீட்டில் ஓய்வெடுக்கும் வகையில் தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் வீட்டின் கதவை தள்ளி திறந்து அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளார். அங்கு கட்டில் தூங்கிக் கொண்டிருந்த அஜயகுமாரை கையால் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. திடுக்கிட்டு எழும்பிய அஜயகுமார் அவரது கைகளை தட்டி விட்டு எழும்பி நிற்க முயன்றார். அதற்குள் அந்த வாலிபர் ஏற்கனவே அஜயகுமார் அறுவை சிகிச்சை செய்து இருந்த முதுகு பகுதியில் ஓங்கி காலால் எட்டி மிதித்து உள்ளார். இதில் நிலைகுலைந்த அஜயகுமார் அலறியபடி கீழே விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். படுகாயம் அடைந்து கிடந்த அஜயகுமாரை அக்கம் பக்கத்தினர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் தூக்கி மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். அங்கு அவர் எழுந்து நடக்க முடியாத நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

