மாநகராட்சி பெண் கவுன்சிலர்களிடம் வழிப்பறி

மாநகராட்சி பெண் கவுன்சிலர்களிடம் வழிப்பறி
X
திண்டுக்கல் அருகே மாநகராட்சி பெண் கவுன்சிலர்களிடம் வழிப்பறி
திண்டுக்கல் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் காயத்ரி (48-வதுவார்டு), சுபாசினி(47வது வார்டு) இவர்கள் வன்னத்துசின்னப்பர் கோவில் அருகே இருசக்கரவாகனத்தில் வந்தபோது முகத்தில் கர்சிப் கட்டிக் கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் மாமன்ற உறுப்பினர்களின் இருசக்கர வாகனத்தை மறித்து அவர்கள் கையில் வைத்திருந்த கை பைகளை பிடுங்கி தப்பி சென்றுள்ளனர். இது குறித்து திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து திண்டுக்கல் 48வது வார்டு மதிமுக மாமன்ற உறுப்பினர் காயத்ரி கூறும்போது, "பெண் மாமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் மக்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எனது கை பையில் முக்கியமான ஆவணங்கள், செல்போன் ஆகியவை உள்ளது. மேலும் சிறிது சுதாரிக்கவில்லை என்றால் பேருந்தில் விழும் நிலை ஏற்பட்டிருக்கும். என தெரிவித்தார்.
Next Story