ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை

ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை
X
மதுரை திருமங்கலம் அருகே ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
மதுரை அருகே கரடிக்கல் அனுப்பப்பட்டியைச் சேர்ந்த சிலம்பரசன்( 37) என்பவர் மதுரை ஆயுதப்படையில் காவலராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கவிதா ஆஸ்டின்பட்டி காசநோய் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிகிறார்.கடந்த ஜூன் 17, 18ல் விடுமுறையில் இருந்த சிலம்பரசன், அன்று மாலை தோட்டத்து வீட்டில் துாங்கச் செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் இரவு 11:00 மணி வரை சாப்பிட வராததால் மனைவி கவிதா அங்கு சென்று பார்த்த போது சிலம்பரசன், துாக்கிட்டு இறந்து கிடந்தது தெரிந்தது. இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Next Story