விராலிமலை: திரவம் குடித்தவர் உயிரிழப்பு!

விராலிமலை: திரவம் குடித்தவர் உயிரிழப்பு!
X
துயரச் செய்திகள்
விராலிமலை தாலுகா ஆவூரை சேர்ந்தவர் ஆல்பர்ட்(45). கார்பெண்டர் வேலை செய்து வந்தார். வீட்டில் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததால் மன உளைச்சலில் இருந்த இவர் கடந்த 14ம் தேதி பெயிண்ட்டுடன் சேர்த்து அடிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த தின்னர் என்ற திரவத்தை குடித்தார். கடும் வயிற்று வலியால் துடித்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று ஆல்பர்ட் உயிரிழந்தார். இதுகுறித்து மாத்துார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story