நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசலில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர்
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தியின் 55- வது பிறந்தநாள் விழா நேற்று நாகை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில், நாகூர் ஆண்டவர் தர்கா அலங்கார வாசலில், மாவட்டத் தலைவர் வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்தராஜா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வீ.ராமலிங்கம், நாகூர் நகரத் தலைவர் எஸ்.சர்புதீன் மரைக்காயர், மாவட்ட சேவா தள தலைவர் எஸ்.நாசீர் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், நிர்வாகிகள், சிறப்பு பிரார்த்தனை நடத்தி பிறந்தநாள் கேக் வெட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினர். விழாவில் மாவட்ட துணைத் தலைவர்கள் அப்துல்காதர், எம்.ஜி.ஜலாலுதீன், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஓ.ஜி.வரதராஜன், மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி துறைத் தலைவர் ஜெ.கே.டி.ராஜ்குமார், கீழ்வேளூர் வட்டாரத் தலைவர் எஸ்.லியோ மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Next Story




