பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் காக்கவும், எரிபொருள், நேரவிரயத்தை குறைக்கும் வகையில் துணை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஜெயங்கொண்டத்தில் அமைக்க சிபிஎம் கோரிக்கை

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் காக்கவும், எரிபொருள், நேரவிரயத்தை குறைக்கும் வகையில் துணை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஜெயங்கொண்டத்தில் அமைக்க சிபிஎம் கோரிக்கை
X
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் காக்கவும், எரிபொருள், நேரவிரயத்தை குறைக்கும் வகையில் துணை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஜெயங்கொண்டத்தில் அமைக்க சிபிஎம் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரியலூர், ஜூன்.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து நகரம் முழுவதும் நடைபயண மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சிபிஎம் கட்சி ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது. நடைபயணத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் கட்சி மாநில குழு உறுப்பினருமான நாகை மாலி தொடங்கி வைத்து பேசும்போது  ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி சிறப்பாக செயல்படுவதாகவும், அவரை பாராட்டுகின்றோம்  அதே சமயத்தில்  திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிறைய வாக்குறுதிகளை கொடுத்து நிறைவேற்றாமலே உள்ளது. ஆட்சிக்கு வந்தவுடன் மின்சார கட்டணத்தை மாதம் அளவிடுவோம் என்று சொன்னார்கள் அதை நடைமுறைப்படுத்தவில்லை, நாடு சுதந்திரம் பெற்றும் குடிமனை பட்டாவிற்கு இன்னுமமும் வழங்கப்படவில்லை. குளத்து புறம்போக்கு, மேச்சல் புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு, கோயில் மனைகளில் குடியிருப்பவர்களுக்கும் பட்டா வழங்க இயலாது என்று தமிழக முதல்வர் கூறுவது தவறு இதை நீதிமன்றத்தில் போராடி தமிழக அரசு அந்தந்த பகுதி மக்களுக்கு மீட்டு தர நடவடிக்கை எடுக்க முயற்சிக்க வேண்டும் என்றும் கூறினார். அதனைத் தொடர்ந்து  பொதுமக்களிடமிருந்து குடிமனை, குடிமனை பட்டா, கோயில் இடங்களில் குடியிருப்போருக்கான குடிமனை பட்டா கோரும் மனுக்களை பெற்றுக்கொண்டார் நடைபயணத்தில் மாவட்ட குழு உறுப்பினர்கள் டி.தியாகராஜன், எஸ்.மீனா,இ.மைதீன்ஷா, எஸ்.குமார், ஆர்.ரவீந்திரன், பி.பத்மாவதி, என்.நீலமேகம் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.இதில் சிபிஎம் கட்சி மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மணிவேல் ஆகியோர் ஒன்றிய மாநில அரசுகளின் செயல் குறித்தும், மக்கள் விரோத போக்கை கண்டித்தும் கண்டனம் தெரிவித்து பேசினர். ஜெயங்கொண்டம் பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளான மாமன்னன் ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழகங்கம் என்ற பொன்னேரியை தூர்வாரி பாசன வசதி செய்து விவசாயிகளையும் விவசாய தொழிலாளர்களையும் விவசாயத்தையும் பாதுகாக்கவும், படகு சவாரி செய்யும் வகையில் சுற்றுலா தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட 16-வது வார்டில் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைத்து அப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனையை போக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பு நீர்நிலை என்ற பெயரில் பல தலைமுறைகளாக குடியிருந்து கஷ்ட ஜீவனம் நடத்தி வரும் ஏழை, எளிய மக்களின் வீடுகளை ஈவு இரக்கமின்றி இடித்து தரைமட்டமாக்கும் போக்கை கைவிட வேண்டும், யூடிஆர் திருத்தத்தில் ஏற்பட்டுள்ள பிழைகளை களப்பார்வை செய்து உரிய பயனாளிகளின் மன உளைச்சலை போக்கி யூடிஆர் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு வழங்கும் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு கொடுத்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும், அரசு வழங்கும் இலவச வீட்டு மனை வெறும் பேப்பரில் மட்டுமே பட்டா வழங்கி இடத்தை கொடுக்காமல் அலைகழித்து வருவதை கண்டித்தும் உரிய நிர்வாகம் தலையீடு செய்து உடனடியாக இடத்துடன் கூடிய பட்டா வழங்க வேண்டும், கங்கைகொண்ட சோழபுரம் கொல்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தற்காலிக பட்டா வழங்கி 30 ஆண்டுகள் ஆகிய பின்னும் நிரந்தர பட்டா கேட்டு மனு கொடுத்து 2 ஆண்டு காலமாகியும் கிடப்பில் உள்ளதை உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் தலையீடு செய்து நிரந்தர பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கிராமப்புற வழித்தடத்தில் சென்று வந்த அரசு பேருந்துகள் கொரோனா காலத்திற்கு பின்னதாக நிறுத்தியதை மீண்டும் கிராம வழித்தடத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் உள்ள பஞ்சமர்களின் நிலங்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டறிந்து பஞ்சம மக்களுக்கே வழங்க வேண்டும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் சொந்த இடத்தில் செயல்பட்டு வந்த பத்திர பதிவு அலுவலகம் தற்போது கடை கோடியில் வாடகை கட்டிடத்தில் இயங்குவதால் பயனாளிகள் சென்று வருவதற்கு மிகவும் சிரமம் ஏற்படுகிறது எனவே சொந்த இடத்தில் கட்டிடம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள ஏரி, குளங்களில் சாக்கடை நீர் கலக்காத வண்ணம் கரைகளை பலப்படுத்தி தூர்வாரி தூய்மைப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை பேரூராட்சி மற்றும் நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும், விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் செயல்படும் தோட்டக்கலை அலுவலகம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஜெயங்கொண்டத்தில் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பத்திரிகை மற்றும் ஊடக செய்தியாளர்களுக்கு வீட்டு மனையுடன் கூடிய குடியிருப்பு அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும், தா.பழூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, உடையார்பாளையம் உள்ளிட்ட பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் காக்கவும், எரிபொருள் விரயம், நேரவிரயத்தை குறைக்கும் வகையில் துணை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை ஜெயங்கொண்டத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் சந்திப்பு நடை பயண பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதில் அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர் சொக்கலிங்கம்,ஆர் கோவிந்தராஜ்,ஆர் ரவி,கே என் பசுபதி,ஆர் ராமலிங்கம்,ஆர் வீரப்பன்,எ சேகர்,ஏ ராதா உள்ளிட்ட ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட கிளைச் செயலாளர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story