நரிக்குறவ மாணவர்களுக்கு பள்ளி சீருடை,பேக் வழங்கல்

X
நெல்லை மாநகர பேட்டை நரிக்குறவர் காலனியில் உள்ள நரிக்குறவர் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதிய அந்தோனியார் பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை நடைபெற்று நேற்று நரிக்குறவ மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.இதனை தொடர்ந்து இன்று (ஜூன் 20) முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார் உத்தரவின்பேரில் நரிக்குறவர் மாணவர்களுக்கு சீருடை, பள்ளி பேக் உள்ளிட்டவற்றை தலைமையாசிரியை பெல்சிடா வழங்கினார். இதில் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.
Next Story

