சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் திருமணமான பெண்ணுடன் வாலிபர் தஞ்சம்

X
சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேற்று 22 வயதுடைய பெண் ஒருவர் 25 வயது வாலிபருடன் தஞ்சம் அடைந்தார். அங்கிருந்த போலீசாரிடம் அவர்கள் நாங்கள் திருமணம் செய்து கொண்டதாகவும், எங்களுக்கு எதிர்ப்பு இருப்பதால் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறினர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் மற்றும் 2 குழந்தைகள் இருந்தது தெரியவந்தது. இதனிடையே அந்த பெண்ணுக்கும், இந்த வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டித்ததால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story

