ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக  தரம் உயர்த்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் சந்திப்பு பிரச்சாரம்

ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக  தரம் உயர்த்த வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மக்கள் சந்திப்பு பிரச்சாரம்
X
ஆண்டிமடம் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக  தரம் உயர்த்துவது உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்கள் சந்திப்பு நடை பயண பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
அரியலூர், ஜூன்.20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மக்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றாத ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து ஆண்டிமடம் ஒன்றியத்தில் நடைபயண மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் சிபிஎம் கட்சி வட்ட செயலாளர் எம்.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. நடைபயணத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரும், சிபிஎம் கட்சி மாநில குழு உறுப்பினருமான நாகை மாலி தொடங்கி வைத்து பேசினார்.  நடைபயணத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி.பரமசிவம், டி. அம்பிகா, மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆர்.இளவரசன், ஆர் செந்தில்வேல், ஆகியோர் முன்னிலை வகித்து பேசினார்.இதில் சிபிஎம் கட்சி மாநில குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், மாவட்ட செயலாளர் எம்.இளங்கோவன் ஆகியோர் ஒன்றிய மாநில அரசுகளின் செயல் குறித்தும், மக்கள் விரோத போக்கை கண்டித்தும் கண்டனம் தெரிவித்து பேசினர். ஆண்டிமடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் கட்டி மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், ரேஷன் கடையில் கண் பார்வை வைத்து செயல்படும் முறையை நிறுத்தி பழைய முறையை செயல்படுத்த வேண்டும், ஆண்டிமடம் பகுதி விவசாயளுக்கு ஆழ்துளை கிணறு இறக்கி பாசனம் செய்து மின்சார வசதி செய்து கொடுக்க வேண்டும், முந்திரிக்கொட்டை மூட்டைக்கு ரூபாய் 20000 வழங்க வேண்டும் குடிமனை பட்டா இல்லாத அனைவருக்கும் இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு சிறுகுரு விவசாய அட்டை வழங்க வேண்டும் கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு பென்ஷன் தருவதை ஒப்புக்கொண்ட தமிழக அரசு ஓய்வூதியம் வழங்கவில்லை அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஆண்டிமடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தி எக்ஸ்ரே உள்ளிட்ட அதிநவீன கருவிகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி அறுவை சிகிச்சை, பிரேத அறுவை சிகிச்சையும் செய்ய கூடம் அமைப்பதுடன் கூடுதல் மருத்துவர் நியமித்து 24 மணி நேரமும் மருத்துவம் பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஆண்டிமடத்தில் தீயணைப்பு நிலையம் அமைத்துக் கொடுக்க வேண்டும் ஆண்டிமடத்தில் நீதிமன்றம் அரசு அறிவித்தது போல் உடனடியாகஅமைத்துக் கொடுக்க வேண்டும், ஆண்டிமடத்தில் பாரத ஸ்டேட் பேங்க் அமைக்க வேண்டும், 100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்தி ரூபாய் 318 குறைக்காமல் வழங்க வேண்டும், ஆண்டிமடம் பகுதியில் பொது கழிப்பறை கட்ட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார நடை பயணமானது இலையூர், வாரியங்காவல், குவாகம், கொடுக்கூர், இடையக்குறிச்சி, அழகாபுரம், சிலம்பூர், ஆண்டிமடம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதி முழுவதும் வாகன பிரச்சார பயணம் நடைபெற்றது.இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆர் சுமதி, ஆர்.காசிநாதன், எம்.வீராசாமி, ஆர்.முருகன், வி.வளர்மதி, ஜி.பெரியசாமி, எம் ராஜா, எம் சங்குபாலன், எஸ் பழனி, எஸ்.சாந்தினி, ஏ.கன்னிமேரி, பி.ராணி, எஸ் .ஜெயராமன்,கே.முருகன், கே.அசோகன், கே.பச்சைமுத்து, எஸ்.பரமசிவம், ஏ.அருளப்பன் ஏ.கலியபெருமாள்,,பி.சுந்தரமூர்த்தி, எஸ் ஸ்ரீதர், பி. ராமமூர்த்தி, கே.செந்தில், எம்.விஸ்வநாதன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். :- 
Next Story