ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி

X
மதுராந்தகத்தில் ஓபிசி காங்கிரஸ் கட்சி சார்பில் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் ஓபிசி காங்கிரஸ் கமிட்டி சார்பில் காங்கிரஸ் கமிட்டியின் இளம் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 55 -ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி மாநில செயலாளர் டாக்டர் ஜீவா ஆனந்தன் ஏற்பாட்டில் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி தலைவர் கௌதம் முன்னிலையில் மதுராந்தகம் தேரடி வீதியில் உள்ள ஆனந்தா மருத்துவ மையம் எதிரே 200-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் மாவட்டத் தலைவர் விஸ்வலிங்கம் மாவட்ட செயலாளர் வேல்ராஜன்,செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி தலைவர் ஜலந்தர், மாநிலத் துணைத் தலைவர் முருகன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

