திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாகன பிரச்சார இயக்கம்.

திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாகன பிரச்சார இயக்கம்.
X
திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாகன பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
அரியலூர், ஜூன்.20- அரியலூர் மாவட்டம் திருமனூர் ஒன்றியம் 2 சக்கர வாகன பிரச்சார இயக்கம்  ஒன்றிய செயலாளர். எஸ்பி.சாமிதுரை தலைமையில் நடைபெற்றது. இரண்டு சக்கர வாகன  பிரச்சாரத்தை சவுரிராஜன் தொடங்கி வைத்தார்.  பிரச்சாரத்தில் சிபிஎம் கட்சி மாவட்ட  செற்குழ உறுப்பினர்கள் பி.துரைசாமி. கே.கிருஷ்ணன், மாவட்டக்குழ உறுப்பினர்கள் என்.ஏசுதாஸ். ஒன்றியக்குழ உறுப்பினர்கள்          .ராஜா. கலைமணி  மற்றும் ஜெ.வரபிரசாதம். ஆரோக்கியசாமி, கணேசன், பாலாஜி. கலையரசன், அறிவழகன், சுப்பமணியன், . சிவகொழந்து, சிவானந்தம் உள்ளிட்ட சிபிஎம் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.  பிரச்சார பயணமானது திருமானுர், அன்னிமங்களம். அரண்மனைகுறிச்சி, பு.மேட்டுதெடு. கண்டிராத்தம், இளந்தகூடம், வெங்கனூர், கரைவெட்டி, காவெட்டாங்குறிச்சி, குந்தபுரம், முடிகொண்டன், உள்ளிட்ட கிராமங்களில் முக்கிய வீதிகளின் வழியாக நடைபயணம் மேற்கொள்ளப்பட்டதுநடை பயணத்தில் திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், கொள்ளிடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும், அனைத்து  பகுதிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசு அரிசி ஆலை அமைக்க வேண்டும், நெல் குவிண்டாலுக்கு கூடுதலான விலை அரசு நிர்ணயிக்க வேண்டும், மாதமாதம் மின்சார கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், ஒன்றிய முழுவதும் கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை செய்திட வலியுறுத்தி பிரச்சார நடை பயணம்  நடைபெற்றது. 
Next Story