ராமநாதபுரம் மீனவ குடும்பம் மாவட்ட ஆட்சியர் மனு
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விசை படகுகள் ஜூன் 18ஆம் தேதி காலை மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர் இதில் மண்டபம் மேற்கு தெருவை சேர்ந்த சர்புதீன் என்பவரது விசைப்படகில் சேது நகரை சேர்ந்த இப்ராஹிம் ஷா வயது 40 மற்றும் அவருடன் மூன்று பேர் என நான்கு பேர் மீன்பிடிக்க சென்றனர்.இந்நிலையில் கடலின் தொலைதூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது நடுக்கடலில் படகின் பலகை பெயர்ந்து கடல் நீர் படகு உள்ளே புகுந்து நடுக்கடலில் படகு கவிழ்ந்து மூழ்கியது. இந்தப் படகின் படகோட்டி இப்ராஹிம் ஷா உட்பட மீனவர் நான்கு பேரும் பிளாஸ்டிக் கேன்களை பிடித்துக் கொண்டு தத்தளித்தனர். தொலைதூரம் சென்று மீன் பிடித்த இவர்கள் நீரோட்டத்தில் கடலில் பல்வேறு பகுதிகளுக்கு இழுத்துச் செல்லப்பட்டு 8 மணி நேரத்திற்கு மேலாக உதவிக்கு யாரும் இன்றி கடலில் தத்தளித்தனர். நள்ளிரவு 12 மணி அளவில் அப்பகுதியில் மீன் பிடிப்பில் ஈடுபட்ட விசைப்படகு மீனவர்கள் மூன்று மீனவர்களை மீட்டனர். இந்நிலையில் படகோட்டி இப்ராஹிம் ஷா மட்டும் காணாமல் போனார்.. அதனைத் தொடர்ந்து சக மீனவர்கள் தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இதுகுறித்து மீன்வளத்துறை மற்றும் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் கடலில் மாயமாகி இரண்டு நாட்கள் ஆகியும் அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற எந்த தகவலும் தெரியவில்லை என அவர்களது குடும்பத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அவர்களை சந்தித்து கண்ணீர் மல்க கதறி அழுதனர் அதன்பின் மனு அளித்தனர். அதற்கு ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக தெரிவித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் மற்றும் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி உள்ளிட்டவர்களிடம் தங்களது புகார்களை தெரிவித்த நிலையில் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Next Story



