அகரம் கிராமத்தில் தரமற்ற முறையில் சிமெண்ட் சாலை.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் வீதி நேற்று சிமெண்ட் சாலை போடப்பட்டது. அதற்கு முன்பு இருந்த சிமெண்ட் சாலை அகற்றாமல் அதன் மீதே மீண்டும் சிமெண்ட்ஸ் சாலை போடப்பட்டது. இந்த நிலையில் அந்த பகுதி மக்கள் பழைய சாலையை கொத்தி மறு சீரமைப்பு செய்யாமல் சிமெண்ட் சாலை மீதே மீண்டும் சிமெண்டை சாலை அமைத்து வருகிறார்கள் என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மீண்டும் பழைய சாலையை அகற்றி சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என்று அனைவரின் எதிர்பார்பாக உள்ளது.
Next Story

